உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகராட்சி கழிவுநீர் வாகனம் சேர்மன் துவக்கி வைப்பு

நகராட்சி கழிவுநீர் வாகனம் சேர்மன் துவக்கி வைப்பு

பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி சார்பில் 2 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்களை நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.பண்ருட்டி நகராட்சி சார்பில், எஸ்.பி.எம்.2.0 நிதியின் கீழ் 86 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகன பணி துவக்க விழா நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்களை துவக்கி வைத்தார்.நகராட்சி சுகாதார அலுவலர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி பிரபு, கவுன்சிலர்கள் சண்முகவள்ளி பழனி, ரமேஷ், கிருஷ்ணராஜ், லாவண்யா, முத்துவேல், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !