டி.என்.சி.சி., ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் துவக்கம்
கடலுார்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்ளுக்கான, கடலுார் மண்டல அளவிலான விளையாட்டு போட்டி, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் துவங்கியது.கூடுதல் கலெக்டர் ஆகாஷ் போட்டிகளை துவக்கி வைத்தார். நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தங்கபிரபாகரன் வரவேற்றார். சென்னை அலுவலக மேலாளர் கோபிநாத் மற்றும் மத்திய விளையாட்டு குழும பொதுச்செயலாளர் ஸ்வெட்லானா ரகுராஜன் சிறப்புரையாற்றினர்.ஆண்களுக்கான பூப்பந்து (இரட்டையர், ஐவர்) மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறகுப்பந்து (ஒற்றையர், இரட்டையர்) போட்டிகள் நடந்தது. போட்டிகளில் 38 மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர்கள் விஸ்வநாதன், வரதராஜன், உதவி மேலாளர்கள் சேகர், முத்துக்குமார் மற்றும் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.