உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை பல்கலையில் மாணவர் உதவி மையம் திறப்பு

அண்ணாமலை பல்கலையில் மாணவர் உதவி மையம் திறப்பு

சிதம்பரம்; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் உதவி மையத்தை துணைவேந்தர் கதிரேசன் திறந்து வைத்தார்.அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் அருகில் சாஸ்த்திரி அரங்கின் முன்பு, மாணவர் உதவி மையம் திறக்கப்பட்டது. துணைவேந்தர் கதிரேசன் திறந்து வைத்தார்.பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் அனைத்து பாடப்பிரிவுகள்தொடர்பாகவும் மற்றும் தொலைதுார கல்வி முடித்தவர்கள் சான்றிதழ் பெறுவது தொடர்பாக உதவ இம்மையம் துவக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில், பதிவாளர்(பொ)பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகுமார், துணைவேந்தரின் நேர்முக தவியாளர் பாக்யராஜ், பி.ஆர்.ஓ., ரெத்தினசம்பத் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை