திருப்பணி துவக்கி வைப்பு
சிதம்பரம் : சிதம்பரம் பாசுபதேஸ்வரர் கோவில் திருப்பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். சிதம்பரம், அண்ணாமலை நகர், திருவேட்களம் பாசுபதேஸ்வரர் கோவிலில் 1.07 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதனையொட்டி கோவிலில் நடந்த விழாவில், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, குத்துவிளக்கேற்றினர்.விழாவில், அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன், கோவில் அறங்காவலர் பெத்தபெருமாள், பேரூராட்சி துணைத் தலைவர் தமிழ்செல்வி, கவுன்சிலர்கள் அன்பரசு, விஜயா, வேலு, புவனேஸ்வரி, லட்சுமி, தி.மு.க., நிர்வாகிகள் ஆனந்த், கருணாநிதி, செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.