சிக்கன் கடையில் நுாதன முறையில் மோசடி
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பழைய கருவூலம் அருகே சிக்கன் கடை நடத்தி வருபவர் , லால்பேட்டையை சேரந்தவர் சர்புதீன், 41. இவர் நேற்று காலை கடையில் இருந்தபோது, மூன்று வாலிபர்கள் இரு பைக்குகளில் வந்தனர். அவர்களில் ஒருவர், தனது வீட்டில் நடைபெறும் விஷேசத்திற்கு 20 கிலோ சிக்கன் ஆர்டர் செய்தார். அதற்கான தொகை 4,400 ரூபாயை ஜி-பே மூலம் அனுப்பிய குறியீடு மற்றும் அதே தொகை கொண்ட ஸ்கிரீன் ஷாட்டை, சர்புதீனிடம், அந்த வாலிபர் காண்பித்தார். பின்னர் மூவரும் அங்கிருந்து கறியுடன் வேகமாக சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற சில நிமிடங்களில், சர்புதீன், வங்கி கணக்கை பார்த்தபோது, இளைஞர்கள் வாங்கிய சிக்கனுக்கான தொகையை அவரது ஜி.பே., எண்ணுக்கு அனுப்பாமல், வேறு எண்ணிற்கு அனுப்பிவிட்டு, மோசடி செய்தது தெரியவந்தது.இதனால் பாதிக்கப்பட்ட சர்புதீன் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த மோசடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.