உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூச்சி மருந்து குடித்து ஆசிரியர் தற்கொலை

பூச்சி மருந்து குடித்து ஆசிரியர் தற்கொலை

குறிஞ்சிப்பாடி: கடன் தொல்லையால் பூச்சி மருந்து குடித்த ஆசிரியர், சிகிச்சை பலனின்றி இறந்தார். குறிஞ்சிப்பாடி, ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமார்,35; இவர், தனது மனைவி சுசிலாவுடன், கடலுார் கம்மியம்பேட்டையில் தங்கி, புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை செய்து வந்தார். கடன் தொல்லையால், மன உளைச்சலில் இருந்த இவர், நேற்று முன்தினம், குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட் அருகே பூச்சிமருந்து குடித்து ஆபத்தான நிலையில் கிடந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை