உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தை தனி தாலுகாவாக்க வலியுறுத்தல்

நெல்லிக்குப்பத்தை தனி தாலுகாவாக்க வலியுறுத்தல்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டுமென, வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். அமரநாதன், அபுசாலிக் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் வரவேற்றார். அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சேர்மன் ஜெயந்தி பாராட்டி பரிசு வழங்கினார்.மத்திய மாநில அரசு களின் ஜி.எஸ்.டி வரி விதிப்பை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். வாடகை கடைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும். நெல்லிக்குப்பத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும். ஜி.எஸ்.டி வரிவிதிப்பை கண்டித்து உண்ணாவிரதம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.வர்த்தக சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், பொருளாளர் சேகர், நகர செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் ஆசாத், துணைத் தலைவர் முனவர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை