உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சர்வதேச கராத்தே போட்டி மாணவர்களுக்கு பாராட்டு 

சர்வதேச கராத்தே போட்டி மாணவர்களுக்கு பாராட்டு 

கடலுார் : சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. காரைக்கால் விளையாட்டரங்கில், சர்வதேச கராத்தே போட்டி நடந்தது. அதில் கடலுார் துறை முகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். கட்டா பிரிவில் ஹென்னா என்ற மாணவி முதலிடத்தையும், சைலேஷ், ரித்திஷ், முகமது தாலிக் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் சிவகுமார், நிர்வாக செயல் அலுவலர் லட்சுமி சிவகுமார் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர். பள்ளி முதல்வர் உதயகுமார் சாம், பள்ளி ஒருங்கிணைப்பாளர், பயிற்சியாளர் சென்சாய் கிருஷணன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை