ஜாக்டோ - ஜியோ கூட்டம்
கடலுார்::கடலுாரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்க உள்ள பேரணி குறித்த ஆயத்தக் கூட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ் வாழ்த்திப் பேசினார். மாநில பொது செயலாளர் அன்பழகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (22ம் தேதி) கடலுாரில் நடக்கும் பேரணியில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது என, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.