10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரதம்
கடலுார் : கடலுார் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாழ்வாதார கோரிக்கைளை அறிவிக்காததைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியான சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அம்பேத்கார் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வெங்கடாஜலபதி, ஆதிதிராவிடர் பழங்குடியினர் காப்பாளர் நலச்சங்க மாநிலத் தலைவர் அருள்பிரகாசம், ஜாக்டோ - ஜியோ மாநில உயர்மட்டக் குழு ஜெகந்நாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தனசேகரன், மணிவண்ணன், மணவாளன், சாந்தகுமார், ரமேஷ், குமரவேல், வாசுதேவன், சிங்காரம், பக்கிரிசாமி, வெற்றிவேல், நல்லதம்பி, சுந்தரராஜன், கிருஸ்டோபர் உட்பட பலர் பங்கேற்றனர்.