விருதையில் ஜமாபந்தி
விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்து வருகிறது.விருத்தாசலம் தாலுகாவிற்கு உட்பட்ட ஊ.மங்கலம் குறுவட்டத்திற்குட்பட்ட 7 கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., விஷ்ணு பிரியா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். கிராம மக்களிடம் பட்டா, சிட்டா, ரேஷன் கார்டு உட்பட பல்வேறு வகை மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார் அரவிந்தன் உடனிருந்தார். வரும் 29ம் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது.