மேலும் செய்திகள்
ரத்தனா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் அசத்தல்
10-May-2025
பண்ருட்டி : பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ்1 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு தேர்வு எழுதிய மாணவிகள் யுவஸ்ரீ 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம், ஷப்ரீனா 585 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பிடித்தனர். 570க்கு மேல் 6 மாணவர்களும், 550க்கு மேல் 17 மாணவர்களும் மதிப்பெண் பெற்றனர்.தேர்வு எழுதிய 363 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலமாக பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது. கணிதம் பாடத்தில் 2 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 2 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.தமிழ்ப்பாடத்தில் 7 மாணவர்கள் 100க்கு 99 மதிப்பெண் பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் வீரதாஸ், முதுநிலை முதல்வர் வாலண்டினாலெஸ்லி, இணை செயலாளர் நிட்டின் ஜோஷ்வா, முதல்வர் மணிகண்டன், தலைமை ஆசிரியர் கனகராஜன் ஆகியோர் பாராட்டினர்.
10-May-2025