உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜெயப்பிரியா மாணவர்கள் வில்வித்தையில் சாதனை

ஜெயப்பிரியா மாணவர்கள் வில்வித்தையில் சாதனை

மந்தாரக்குப்பம்; உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. 15 மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். தமிழகத்தில், கடலுார் மாவட்டத்திலிருந்து ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தை சேர்ந்த 25 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த மாணவன் பிரகலன், 14 வயதுக்குட்பட்ட பிரிவிலும், எழில்மாறன் 10 வயதுக்கு உட்பட்ட பிரிவிலும், தனிநபர் மற்றும் குழு பிரிவு இரண்டிலும் தங்கப்பதக்கங்கள் பெற்றனர்.மேலும் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தனி மற்றும் குழு போட்டியில் ரித்து, ஸ்ருதிஹா, தென்றல், அஸ்மாயின் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றனர்.விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சதன் கிருஷ் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம், பால பிரியதர்ஷினி 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கீர்த்தனா, கவிநிலா, லக்சன், ஸ்ரீஹரிணி, அர்மான் மாலிக், ஜெசிக்கா மற்றும் வேதேஷ் ஆகியோர் இரண்டு பிரிவுகளிலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றனர்.தொழுதூர் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவன் சித்திரைசெல்வன் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தையும், கிரீன் பார்க் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் கோகுல் மற்றும் முகமது உமர் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை பெற்றனர். தேசிய அளவிலான வில்வத்தை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழும தலைவர் ஜெய்சங்கர், இயக்குநர் தினேஷ், முதல்வர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை