மேலும் செய்திகள்
முப்பெரும் விழா
15 hour(s) ago
கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்
15 hour(s) ago
இருண்டு கிடக்கும் சாலை
16 hour(s) ago
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 17 மாணவிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. காட்டுமன்னார்கோவிலில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. சென்னை சிம்கோ விபிசி சென்சார் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி செந்தில்குமார் மாணவிகளிடம் நேர்காணல் நடத்தினார். முகாமில் இ.இ.இ., இ.சி.இ., துறையை சேர்ந்த 30 மாணவிகள் பங்கேற்றனர். இதில் 17 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. அவர்களுக்கு கல்லுாரி சேர்மன் கதிவரன் வாழ்த்து தெரிவித்தார். கல்லுாரி முதல்வர் ஆனந்தவேலு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago