மேலும் செய்திகள்
வடலுார் தருமச்சாலையில் துவக்க விழா கொடியேற்றம்
25-May-2026
வடலுார்: வடலுாரில் ஜோதி தரிசன வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், தருமச்சாலை அமைந்துள்ளது. இங்கு வைகாசி மாத பூசம் நட்சத்திர தினமான நேற்று முன்தினம் ஆறு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இரவு, 7:45 மணிக்கு தொடங்கி, 8:45 மணி வரை மூன்று காலங்களாக நடந்த ஜோதி தரிசனத்தை, வடலுார் குறிஞ்சிப்பாடி நெய்வேலி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும், சன்மார்க்கர்கள் வழிபட்டனர். ஜோதி தரிசனம் காண வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
25-May-2026