கன்சிராம் நினைவு தினம்
கடலுார் : பகுஜன் சமாஜ்கட்சி சார்பில் கடலுார் அரசு தலைமை மருத்துவமனை அருகில் கன்சிராம் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் கன்ஷிராம் உரு படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அக்கட்சியின் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.