மேலும் செய்திகள்
நடிகர் சங்கம் பெயரில் ரூ.40 லட்சம் மோசடி
10-Jul-2025
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அன்னை தெரசா மழலையர் பள்ளியில் மவாத்தே கா ஷிட்டோ ரியூ கராத்தே சங்கம் சார்பில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா நடந்தது. சிறப்பு விருந்தினர் ஆசிய கராத்தே சங்க தேசிய நடுவர் கலைமணி, பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் வழங்கி பாராட்டினார். மாவட்ட கராத்தே சங்க தலைவர் ராமலிங்கம் ஆறாவது முறையாக பிளாக் பெல்ட் வாங்கினார். மதன் ராஜ், திருவேங்கடம், ராகவன் மூன்றாம் நிலை பிளாக்பெல்ட் வாங்கினர். கராத்தே பயிற்சி முடித்த மாணவர்கள் இசைக்கவி, சரண், தருணலிங்கம் ஆகியோர் முதல் நிலை பெல்ட் வாங்கினர். விழாவில் பள்ளி தாளாளர் குணாளன் உட்பட பலர் பங் கேற்றனர்.
10-Jul-2025