உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கராத்தே நடுவருக்கான செலக்ஷன் பயிற்சி பள்ளி மாணவன் தேர்ச்சி

கராத்தே நடுவருக்கான செலக்ஷன் பயிற்சி பள்ளி மாணவன் தேர்ச்சி

சிதம்பரம் : தமிழ்நாடு ஸ்பார்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சார்பில் நடந்த கராத்தே நடுவர்களுக்கான தேர்வில் ஷர்மா தேர்ச்சி பெற்றார். தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சார்பில் கராத்தே நடுவர்களுக்கான செலக்க்ஷன் தேர்வு நடந்தது. கடலூரில் நடந்த நடுவருக்கான செலக்க்ஷன் தேர்விற்கு, தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க மாநில செயலாளரும், தேசிய நடுவருமான ஹான்ஸி அல்தாப் ஆலம் தலைமையில் நடந்தது. இதில், கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். இந்த செலக்க்ஷன் தேர்வில், பெறாக் ஒகினவா, கோஜி ரியோ கராத்தே பயிற்சி பள்ளி மாணவன். ஷர்மா பங்கேற்று, நடுவர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தேர்வு செய்யப்பட்ட மாணவனுக்கு, கோஜி ரியோ கராத்தே சங்க தலைவர் சென்சாய் ரெங்கநாதன், பயிற்சியாளர் இளவரசன். சத்யராஜ். சத்தியமூர்த்தி. பிருத்தியூனன். ரவிக்குமார் உள்ளிட்டோர் பாராட்டு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !