உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மலையாண்டவர் கோவிலில் 16ம் தேதி கரிநாள் திருவிழா

மலையாண்டவர் கோவிலில் 16ம் தேதி கரிநாள் திருவிழா

நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் வரும் 16ம் தேதி வியாழக்கிழமை காணும் பொங்கலை முன்னிட்டு கரிநாள் திருவிழா நடக்கிறது.விழாவை முன்னிட்டு அன்று காலை 10:00 மணிக்கு விநாயகர்,ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர்,வள்ளி தேவசேனா சமேத சுப்பரமணியர்,சண்டிகேஸ்வரர்,தனி அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி உற்சவர்களுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.இரவு 9:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்து,சுவாமிகள் ஆலய உலாவாக வந்து,வாகனங்களில் வீதி உலா நடக்கிறது.17 ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு கோவில் எதிரில் உள்ள குளத்தில் விநாயகர் தெப்பல் உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை