மேலும் செய்திகள்
கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
08-Aug-2025
சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகராட்சி சேர்மன் செந்தில்குமார் தலைமை தாங்கி, கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, மாவட்ட பொறியாளர் அணி சார்பில் அப்பு சந்திரசேகர் தலைமையில் எஸ்.பி., கோவில் தெருவில் துாய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. 16வது வார்டு, சின்ன செட்டித் தெருவில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள், மணிகண்டன், வெங்கடேசன், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், இளைஞரணி அமைப்பாளர் அருள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
08-Aug-2025