உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நுாற்றாண்டை நோக்கி கருங்குழி ஊராட்சி துவக்க பள்ளி கிராமப்புற மாணவர்களுக்கு ஏணிப்படிகளாக திகழ்கிறது

நுாற்றாண்டை நோக்கி கருங்குழி ஊராட்சி துவக்க பள்ளி கிராமப்புற மாணவர்களுக்கு ஏணிப்படிகளாக திகழ்கிறது

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வடலுார் வள்ளலார் சபை அருகே அமைந்துள்ளது கருங்குழி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி. இப்பள்ளி கடந்த 1927ம் ஆண்டு அக்., 7ம் தேதி துவங்கப்பட்டது. 100வது ஆண்டை நெருங்கும் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலரும் டாக்டர்கள், இன்ஜினியர்கள், நீதிபதிகள், ஆசிரியர்கள், காவலர்கள், வழக்கறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர்.இந்த பள்ளி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஏணிப்படிகளாக திகழ்கிறது. பள்ளியில் காற்றோட்டமான வகுப்பறை, நவீன கரும்பலகை, ைஹடெக் வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன.மாணவர்களின் நலனில் அக்கறையோடு செயல்படும் இப்பள்ளி, தனியார் பள்ளிக்கு போட்டியாக கிராம மக்களின் குழந்தைகள் விரும்பி பயிலும் அளவிற்கு கல்வி தரத்தில் உயர்ந்துள்ளது. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் மாணவர்களின் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. சிறந்த பள்ளிக்கான விருது கடந்த 2017ம் ஆண்டு வழங்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு ஆண்டு புதுமை பள்ளிக்கான விருதை அப்போதையை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார்.தலைமை ஆசிரியர் அந்தோணி ஜோசப்பிற்கு கடந்த 2023ம் ஆண்டில் நல்லாசிரியர் விருது மற்றும் கனவு ஆசிரியர் விருது கிடைத்துள்ளது. பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வரும் பள்ளி நன்கொடையாளர், வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் ேஷாரூம் உரிமையாளர் ராஜமாரியப்பனை கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் பாலசுப்ரமணியம் பாராட்டினார். கிராம மக்கள் சார்பில் பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்கள் சீர்வரிசை பொருட்களாக வழங்கப்பட்டு வருகிறது.

முன்மாதிரி பள்ளி

தலைமை ஆசிரியர் அந்தோணி ஜோசப் கூறிய தாவது: கடந்த 14 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். இப்பள்ளியில் படித்த பல மாணவர்கள் பல நிறுவனங்களில் பணிபுரிந்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். தேசிய திறனாய்வு தேர்வில் பல மாணவர்களை தேர்வு செய்ய உறுதுணையாக இருந்துள்ளோம்.குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் முன்மாதிரியாக இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஆசிரியர்கள் அனைவரும் கடினமாக பணியாற்றி வருகின்றனர்.மாணவர்களுக்கு எந்த வகையில் கற்பிக்க வேண்டும் என்பதை துவக்கத்திலேயே புரிந்து கொண்டு அவர்களுக்கு தகுந்தாற்போல் கற்பித்து வருகிறோம். சாதனை மாணவர்களை உருவாக்குவதே குறிக்கோள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ