மேலும் செய்திகள்
கோயில்களில் முளைக்கொட்டு உற்ஸவம்
07-Aug-2025
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த பூவிழந்தநல்லுார் காசி விஸ்வநாதர் கோவில் 2ம்ஆண்டு கும்பாபிஷேக நாள் விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு விநாயகர், முருகர், நடராஜர், அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில், சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனர் வெங்கடேசன் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். அலுவலக கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், கிராம தலைவர் பத்மநாபன் ,முன்னாள் ஊராட்சி தலைவர் திரிபுரசுந்தரி பத்மநாபன், ஆசிரியர் ஞானம் மற்றும் ஊர் மக்கள் பங்கேற்றார்.
07-Aug-2025