உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குள்ளஞ்சாவடி அரசு பள்ளி 97.85 சதவீதம்

குள்ளஞ்சாவடி அரசு பள்ளி 97.85 சதவீதம்

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அரசுப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்றது.குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 72 மாணவர்கள், 68 மாணவிகள் என மொத்தம், 140 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். அதில், 137 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இப்பள்ளி 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவர் அருள்ஜோதி 543 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவிகள் தமிழரசி 493 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், அபிராமி 486 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ