உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தரைகாத்த காளியம்மன்  கோவில் கும்பாபிஷேகம்

தரைகாத்த காளியம்மன்  கோவில் கும்பாபிஷேகம்

கடலுார் ;புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கடலுார் புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவிலில் கும்பாபிேஷக யாக சாலை பூஜைகள், கடந்த 1ம் தேதி அனுக்ஞை, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. கோ பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. 3ம் தேதி மாலை, முதல் யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தன. 4ம் தேதி காலை இரண்டாம் காலம், மாலை மூன்றாம் காலம் யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன. நேற்று காலை தத்துவார்ச்சனை, தேவி மூல மந்திர ேஹாமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கடம் புறப்பாடு செய்து, 11:00 மணிக்கு கோவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை வக்கரகாளியம்மனுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தன. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !