உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பரதுார் சாவடியில் கும்பாபிேஷகம்

பரதுார் சாவடியில் கும்பாபிேஷகம்

சேத்தியாத்தோப்பு,; பரதுார்சாவடி கிராமத்தில் 3 கோவில்களில் கும்பாபிேஷகம் நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார்சாவடி வரசித்திவிநாயகர், காளியம்மன், சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிேஷக விழா கடந்த 2ம் காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 3ம் தேதி வாஸ்துசாந்தி, பிரவேச பலி, பாலிகை பூஜை, கும்ப அலங்காரம், திரவிய ஹோமம், பூர்ணாஹூதி தீபாரதனை நடந்தது. 4ம் தேதி கரிக்கோலம், கோபூஜை, சாமி பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் மருந்துசாற்றுதல், மாலை மூன்றாம் கால யாக பூஜை, மூல மந்திர ஹோமம் நடந்தது. 5ம் தேதி நேற்று காலை 5.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடிசந்தானம், கடம்புறப்பாடாகி கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ