மேலும் செய்திகள்
பழநி முருகன் கோயிலில் ஆடி கார்த்திகை
17-Aug-2025
பண்ருட்டி : புதுப்பேட்டை காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிேஷகம் கடந்த 8ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 4ம் கால யாக சாலை பூஜைகள், பூர்ணாஹுதி, யாத்ராதானம் நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பாடாகி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
17-Aug-2025