மேலும் செய்திகள்
டூவீலரில் இருந்து விழுந்த வாலிபர் சாவு
25-Sep-2024
கடலுார்: கடலுார் அருகே கூலித்தொழிலாளி இறந்தது குறித்து, ரெட்டிச்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் மகன் பத்மநாபன், 32; கூலித்தொழிலாளி. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, புதுக்கடை வீரப்பத்திரசாமி கோவில் தெருவில் மனைவி மற்றும் குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள பத்மநாபன், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு மதுபோதையில் வந்தார். இரவு 9:00 மணியளவில் சாப்பிடுவதற்காக எழுப்பியபோது எழுந்திருக்கவில்லை. உடன் கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பத்மநாபன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.பத்மநாபன் மனைவி கனிமொழி அளித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார், சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
25-Sep-2024