உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி சோரடியா பள்ளி ஆண்டு விழா

லட்சுமி சோரடியா பள்ளி ஆண்டு விழா

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர், பாபுராவ் தெருவில் உள்ள லட்சுமி சோரடியா பள்ளியில் 11வது ஆண்டு விழா நடந்தது.லட்சுமி சோரடியா பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். புதுச்சேரி வழக்கறிஞர் ரம்யா ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா, தாளாளர் அசோக்மல் சோரடியா, பள்ளி தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.ஸ்ரீ லட்சுமி சோரடியா பள்ளி முதல்வர் ராஜலட்சுமி சோரடியா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ