உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு போராட்டம்

நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு போராட்டம்

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கவியரசன் வரவேற்றார். இணை செயலாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நீலராஜ் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடாஜலபதி, மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர்.இதில், தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.நிர்வாகிகள் வெங்கடேசன், பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சந்திரஹாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை