உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நில உடமை பட்டாதாரர்கள் பெயர் நீக்க விண்ணப்பிக்கலாம்

நில உடமை பட்டாதாரர்கள் பெயர் நீக்க விண்ணப்பிக்கலாம்

கடலுார்: நில உடமை பட்டதாரர்கள் பெயர் நீக்கம், மாற்றம் செய்ய ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். அவரது செய்திக் குறிப்பு: வருவாய்த்துறையில் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் http://eservices.tn.gov.inஎன்ற இணையதளம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும் பல சிட்டாவில் உள்ள பட்டதாரர்களுள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்காமலும், அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்கள் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன. எனவே, பட்டாவில் உள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்த ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்கள் சேர்க்க, பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையம் 'சிட்டிசன் போர்ட்டல்' மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது. பட்டா பெயர் மாற்றம் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆவணங்களின் அடிப்படையில் ஜமாபந்தியில் பரிசீலனை செய்து, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை