உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம்: கலெக்டர், எஸ்.பி., பங்கேற்பு

சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம்: கலெக்டர், எஸ்.பி., பங்கேற்பு

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டம், ஒழுங்கு குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.கடலுார் மாவட்டத்தில், பொதுமக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடந்த சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். எஸ்.பி., ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்தல், மயானப் பாதையினை மறைத்து ஆக்கிரமிப்பு செய்தல், கோவில் இடங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தி பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல், சமூக நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் தரப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், தேவையான இடங்களில் பாதுகாப்பு கருதி உயர்கோபுர மின்விளக்குகள் ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கலெக்டர் பேசுகையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், எவ்வித இடையூறுமின்றி பொதுமக்கள் தங்களின் இயல்பு நிலையினை மேற்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் கூட்டாக இணைந்து தேவைப்படும் இடங்களில் அமைதி கூட்டங்கள் நடத்தி சமரச தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, அதிகாரிகளை அறிவுறுத்தினார்.மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மி ராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ