உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சி பள்ளியில் கற்றல் திறன் ஆய்வு

ஊராட்சி பள்ளியில் கற்றல் திறன் ஆய்வு

கடலுார்: கடலுார் அடுத்த வாண்டரசன்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத்திறன்களில் 100சதவீதம் கற்றல், வாசித்தல் திறன் ஆய்வு நடந்தது.கடலுார் ஒன்றியம், வாண்டரசன்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100நாளில் 100சதவீதம் அனைத்து மாணவர்களும் தமிழ், ஆங்கிலம் வாசித்தலிலும், கணித அடிப்படைத்திறன்களிலும் மேம்பாடு அடைந்துள்ளதை வெளிப்படுத்தும் சவால் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சத்தியா, உதவிஆசிரயர் ஞானசவுந்தரி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் தணிகாசலம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஆனந்தி, பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்று ஆய்வு செய்தனர். கடலுார் மேற்கு ஒன்றிய தி.மு.க.,மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, ஞானசேகர் முன்னிலையில் மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தினர். இதில் அனைத்து மாணவர்களும் தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல், கணித அடிப்படை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ