உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இணைப்பு சாலை சேதம்: நடவடிக்கை தேவை

இணைப்பு சாலை சேதம்: நடவடிக்கை தேவை

விருத்தாசலம்: குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சின்னவடவாடி - எம்.பட்டி கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி - எம்.பட்டி கிராம இணைப்பு சாலை வழியாக லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலை போடப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், சாலை தற்போது பராமரிப்பின்றி, ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி, சேதமடைந்துள்ள சின்னவடவாடி - எம்.பட்டி கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !