உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கனரா வங்கியில் கடன் வழங்கும் முகாம்

கனரா வங்கியில் கடன் வழங்கும் முகாம்

கடலுார் : கடலுார், விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை ஆகிய பகுதியில் இயங்கும் கனரா வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம் நடந்தது. கடலுாரில் நடந்த முகாமில் மண்டல அலுவலர் தருண் சபரிநாத் ரெட்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்கள் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், மாவட்ட தொழில் மைய அதிகாரி மனோகரன் ஆகியோர் கடன் உதவிக்கான ஆணையை வழங்கினர். இதில் 148 பேருக்கு 38 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இதில் கனரா வங்கியின் 54 கிளைகளை சேர்ந்த மேலாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கடலுார் கனரா வங்கி கிளை செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை