உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

நடுவீரப்பட்டு: மணல் கடத்திய டிப்பர் லாரியை புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நடுவீரப்பட்டு அடுத்த சஞ்சீவிராயன் கோவில் அருகே கடலுார் புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பெர்னார்ட் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் காலை வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டி.என் 32 டி 5477 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை சோதனை செய்ய நிறுத்தினர்.உடன் டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினார். அதிகாரிகள் லாரியை சோதனை செய்ததில், 3 யூனிட் ‘கிராவல் வாஷிங் மணல்’ கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் அதிகாரிகள், லாரியை மணலுடன் பறிமுதல் செய்து நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி