உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., கிளை மாநாடு

மா.கம்யூ., கிளை மாநாடு

பெண்ணாடம்; பெண்ணாடத்தில் மா.கம்யூ., நகர கிளை மாநாடு நடந்தது.நிகழ்ச்சிக்கு, செரின் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், வட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அரவிந்தன் வரவேற்றார். நிர்வாகிகள் விஸ்வநாதன், பழனிபாரதன், நிலா, முகி, கனிமொழி, புஷ்பவல்லி, பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மூத்த நிர்வாகி பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ