மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
பெண்ணாடம்: மத்திய அரசை கண்டித்து, பெண்ணாடத்தில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் முத்துலட்சுமி, மூத்த நிர்வாகி ராஜேந்திரன், வட்டக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், அரவிந்த் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், ஈரான் மீது போர் தொடுப்பதை அமெரிக்கா, இஸ்ரேல் நிறுத்த வேண்டும். சமையல் காஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.