மேலும் செய்திகள்
புவனகிரியில் பழனிசாமிக்கு வரவேற்பு
18-Jul-2025
புவனகிரி: மேல்புவனகிரி ஒன்றியம், கீழ் வளையமாதேவி கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேல்புவனகிரி ஒன்றியம், கீழ்வளையமாதேவி ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புவனகிரி தாலுகா அலுவலகம் எதிரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை தொகுதி மா.கம்யூ., எம்.எல்.ஏ.,வுமான சின்னதுரை கோரிக்கைளை வலியுறுத்திப் பேசினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், பொருளாளர் கிருஷ்ணன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சரவணன், விவசாய சங்க தலைவர் சண்முகம், வி.தொ.ச., நிர்வாகிகள் மணி, ஜீவா மற்றும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்து, எம்.எல்.ஏ., பொதுமக்களுடன், போராட்ட பந்தலில் மதிய உணவு அருந்தினார். தாசில்தார் அன்பழகன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
18-Jul-2025