உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ.., மக்கள் சந்திப்பு நடைபயணம்

மா.கம்யூ.., மக்கள் சந்திப்பு நடைபயணம்

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவிலில் மா.கம்யூ., மக்கள் சந்திப்பு பிரசார நடைபயணம் நடந்தது.காட்டுமன்னார்கோவில் பஸ் ஸ்டாண்டு அருகே நடந்த பிரசார நடைபயணத்திற்கு வட்ட செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் மாநிலக் குழு உறுப்பினர் வாலண்டினா பேசினார். நடைபயணத்தை மாவட்ட செயலாளர் மாதவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டிப்பதாக கூறி கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், பிரகாஷ், உறுப்பினர் மகாலிங்கம், வட்டக் குழு உறுப்பினர்கள், பொன்னம்பலம், விமலக்கண்ணன், மணிகண்டன், ஜாகிர் உசேன், தனபால், ரேணுகா, நாகப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ