உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.பி.எஸ்.இ., தேர்வில் மகரிஷி பள்ளி சாதனை

சி.பி.எஸ்.இ., தேர்வில் மகரிஷி பள்ளி சாதனை

நெய்வேலி: நெய்வேலி மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.நெய்வேலி மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் முதன் முறையாக பங்கேற்ற 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். முதல் மதிப்பெண் 500க்கு 489 ஆகும்.6 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். செயற்கை நுண்ணறிவு பிரிவில் 3 பேர், தமிழில் 2 பேர், கணிதத்தில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். மாணவர்களையும், தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ