மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்
கடலுார்: கடலுாரில் மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத ஊர்வலம் நடந்தது. இதையொட்டி, கடலுார் சன்னதி தெருவில் உள்ள சிந்தாமணி பாரஸ்வநாதர் கோவிலில் ஜெயின் சமூகத்தினர் நேற்று சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மகாவீர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, உலக அமைதிக்காக சிறப்பு பஜனைகள் நடந்தது. ஊர்வலத்தில் ஜெயின் சங்க தலைவர் அசோக்குமார் தலைமையில், செயலாளர் அத்தீஸ், சங்க பிரமுகர்கள் தில்சுக்மல் மேத்தா, ராஜகுலேச்சா, ஆர்.எம்., மகாவீர் ஜூவல்லரி ஆனந்தகுமார், விஜயகுமார், பாரஸ்மல் டிரேடர்ஸ் பாரஸ்மல், லலீத் மற்றும் அனைத்து ஜெயின் சமூகத்தினர் பங்கேற்று, மகாவீரரின் போதனைகளை வலியுறுத்தினர். திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.