உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி வேன் டிரைவரை தாக்கியவர் கைது

பள்ளி வேன் டிரைவரை தாக்கியவர் கைது

மந்தாரக்குப்பம்:மந்தாரக்குப்பத்தில் பள்ளி வேன் டிரைவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்ததனர். பெரியாக்குறிச்சி புதுநகரைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி, 62; தனியார் பள்ளி வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை தனது பள்ளி வேனில் மாணவர்களை குறிஞ்சி நகர் வழியாக அழைத்து சென்றார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற கீழக்குப்பம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார், பள்ளி வாகனத்தை மறித்து சாலையில் சென்ற எனக்கு ஏன் வழிவிடவில்லை என கேட்டு, டிரைவர் அஞ்சாபுலியை தாக்கினார். இதுகுறித்து புகாரில், மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விஜயக்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ