உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அடுத்த பழையபட்டிணம் பனையன் மகன் ராகவன். கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன்கள் சதீஷ், 26, செல்வ ராசு, 22, முன்விரோதத்தில் கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.படு காயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, செல்வராசுவை கைது செய்தனர். தலைமறைவான சதீஷ் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !