பெண்ணை தாக்கியவர் கைது
சேத்தியாத்தோப்பு: பெண்ணை தாக்கியவரை போலீசார் கை து செய்தனர். சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி நித்யா,39; இட்லி கடை நடத்தி வருகிறார்.இவரிடம் , நேற்று முன்தினம் காலை பரதுார் தெற்கு தெருவைச் சேர்ந்த சரவணன்,45: டிபன் பார்சல் வாங்கினார். அதற்கு நித்யா பணம் கேட்டதும், அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து நித்யா கொடுத்த புகாரின் பேரில் ஒரத்துார் போலீசார் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்து சிறையிலடைத்தனர்.