உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மங்கலம்பேட்டையில் ரூ. 23 லட்சத்தில் சாலை

மங்கலம்பேட்டையில் ரூ. 23 லட்சத்தில் சாலை

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 23 லட்சம் ரூபாயில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.மங்கலம்பேட்டை பேரூராட்சி பாலசுப்பிரமணியர் கோவில் தெருவில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 23 லட்சம் ரூபாயில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது. செயல் அலுவலர் மயில்வாகணன் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர் செல்வி, தி.மு.க., செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர்.பேரூராட்சி தலைவர் சம்சாத் பாரி இப்ராகிம் துவக்கி வைத்தார். தி.மு.க., பேரூர் செயலாளர் செல்வம், துணை செயலாளர் பாரி இப்ராகிம், பொறியாளர் கமலக்கண்ணன், ஒன்றிய பிரதிநிதி நடராஜன் உடனிருந்தனர். துப்புரவு மேற்பார்வையாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி