காய்ச்சல் பரவலை தடுக்க முகக்கவசம் அவசியம்: டாக்டர் கலைக்கோவன் அறிவுரை
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் காய்ச்சல் பரவலை தடுக்க காய்ச்சி வடிகட்டிய நீரை பருக வேண்டும் என,கடலுார் கோவன்ஸ் நுரையீரல் சிறப்பு மையத்தின் டாக்டர் கலைக்கோவன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடலுார் மாவட்டத்தில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே வழக்கத்தை விட அதிக அளவில் வைரஸ் காய்ச்சல், சளி மற்றும் இருமல் பரவுகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் காய்ச்சி வடிகட்டிய நீரை பருக வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் அருகில் செல்லக்கூடாது. புளிப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.