மேலும் செய்திகள்
விருத்தாசலத்தில் டெங்கு விழிப்புணர்வு
15-Nov-2024
விருத்தாசலம்: வடகிழக்கு பருவமழையையொட்டி, விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை, விஜயமாநகரம் ஆகிய கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு, மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார்.நடமாடம் மருத்துவ குழு மருத்துவர் லாவண்யா தலைமையிலான குழுவினர், பொதுமக்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.அதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.மங்கலம்பேட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் துளசிதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், கார்த்திகேயன், ராஜ்மோகன், முல்லைநாதன், பரத் ராஜ்குமார், தாண்டவராயன், அவினாஷ், சதிஷ்குமார் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
15-Nov-2024