மருத்துவ பணியாளர்கள் சமையல் செய்து போராட்டம்
கடலுார்: கடலுாரில் மக்களைத்தேடி மருத்துவ திட்ட பெண் பணியாளர்கள், சமையல் செய்து போராட்டம் நடத்தினர். மக்களை தேடி மருத்துவ திட்ட பெண் பணியாளர்கள் பணி நேரத்தை வரையறுக்க வேண்டும். மகப்பேறு கால விடுப்பு அளிக்க வேண்டும் என்பன, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த, 3ம் தேதி முதல், வரும் 10ம் தேதி பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்போதவாக அறிவித்தனர். அதன்படி, கடந்த, 3ம் தேதி முதல், கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 5ம் நாளான நேற்று மக்களைத் தேடி மருத்துவ திட்ட பெண் பணியாளர்கள் சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.