உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வணிகர் சங்க தலைவர் பிறந்தநாள் விழா

வணிகர் சங்க தலைவர் பிறந்தநாள் விழா

பண்ருட்டி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலுார் மண்டல தலைவர் சண்முகம் 80 வயது பிறந்த நாள் விழா பண்ருட்டி ஆர்.கே.எம்.கன்ஸ்ட்ரக்ஷனில் நடந்தது.நிகழ்ச்சிக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் சதக்குத்துல்லா, மாநில தலைமை செயலாளர் ராஜ்குமார், கூடுதல் செயலர் ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். தொழில் வர்த்தக சங்க மாவட்ட செயலாளர் வீரப்பன் வரவேற்றார். கடலுார் மண்டல தலைவர் சண்முகத்திற்கு பலரும் சால்வை அணிவித்தனர்.இதில் முன்னாள் அமைச்சர் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவக்கொழுந்து, நந்தகோபாலகிருஷ்ணன், எஸ்.பி.,ராஜாராம், டி.எஸ்.பி.ராஜா, ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், கடலுார் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், கடலுார் நகர தலைவர் துரைராஜ், செயலாளர் சீனுவாசன், தொழிலதிபர்கள் ராஜ்மோகன், அருள், வள்ளி விலாஸ் சரவணன், மீனா ஜீவல்லர்ஸ் தேவராஜ், ஜெ.கே.ஆர்.டெக்ஸ் ரமேஷ், குமாரசாமி இண்டஸ்ட்ரீஸ் கார்த்திக் பங்கேற்றனர்.மேலும், வழக்கறிஞர் சிவமணி, சுப வள்ளி விலாஸ் கணேசன், ரவிசேகர், ஸ்ரீவள்ளி விலாஸ் பாலு, சீனுவாசன், ரமேஷ், குறிஞ்சிப்பாடி ஸ்ரீவள்ளி விலாஸ் சிங்காரவேல், வள்ளி விலாஸ் முரளி , சுகந்தி மளிகை செல்லப்பாண்டியன், அரவிந்த் ஜீவல்லர்ஸ் அரவிந்த்குமார், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன், வசந்தபவன் ஆறுமுகம், சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் கொளஞ்சிநாதன், தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் கஜபதி, அபிராமி ஜீவல்லர்ஸ் தட்சணாமூர்த்தி, ஸ்ரீராம் பேட்டரி ராஜசேகர், எக்ஸ்னோரா கிளப் பசுபதி, பண்ருட்டி நகர பொருளாளர் கருணாநிதி, சம்பத்லால், சிவகுரு, சக்திவேல், உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !