உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்களை தேடி மருத்துவத்தில் 2 கோடி பேர் பயன் அமைச்சர் கணேசன் தகவல்

மக்களை தேடி மருத்துவத்தில் 2 கோடி பேர் பயன் அமைச்சர் கணேசன் தகவல்

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் சுகாதாரத் துறை சார்பில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் துவக்க விழா நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், டி.ஆர்.ஓ., ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கணேசன் முகாமை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின், அவர் பேசியதாவது: பொதுமக்கள் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்துடன் வாழ, வரும் முன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48 திட்டம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம், சிறுநீரக பாதுகாப்பு சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் திட்டம் என, பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை, 2 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டத்தில 11 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுதும் 1,256 முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில், கடலுார் மாவட்டத்தில், 43 இடங்களில் முகாம் நடக்க உள்ளன. சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் போன்ற பகுதிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்து முகாம் நடத்தப்பட உள்ளது. பயனாளிகள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே நடக்கும் மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை